திருத்தணி அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்

திருவள்ளூர் மாவட்டம் சொரைக்காய்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மக்கள், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் சொரைக்காய்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மக்கள், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருத்தணி: திருத்தணி அருகே கழிவு நீர் கலந்த நீரை பருகியதில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதால் இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சொரைக்காய்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மக்கள், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் உண்ணாமலை, கண்ணப்பன் ஆகிய இருவரும் 2 நாட்களுக்கு முன் உயிரிழந்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாவித்ரி என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து பம்புசெட் ஆப்ரேட்டர் செல்வம் மற்றும் ஊராட்சிமன்ற செயலாளர் சரத் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஆழ்துளை கிணற்று தண்ணீரில் கழிவு நீர் கலந்ததால் அதனை பயன்படுத்த சுகாதராரத் துறை தடை விதித்திருந்தது. கடந்த சிலநாட்களுக்கு முன் குடிநீர் வழங்கி வந்த ஆழ்துளை கிணற்றின் குழாய் பழுதானதால், தடையால் பயன்படுத்தப்படாமல் இருந்த கிணற்றில் இருந்து கிராமத்தின் 2 தெருக்களுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதுவே 3 பேரின் உயிர் பறிபோக காரணமாக அமைந்துவிட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>