திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பயங்கர வன்முறை: கடைகள் சூறை, வாகனங்களுக்கு தீ வைப்பு

திரிபுரா மாநிலத்தில் பழங்குடியினர் மக்கள் அதிகம் வசிக்கும் திரிபுரா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

திரிபுரா மாநிலத்தில் பழங்குடியினர் மக்கள் அதிகம் வசிக்கும் திரிபுரா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

அகர்தலா: திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் தனி மாநில கோரிக்கை வலியுறுத்தி நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது. திரிபுரா மாநிலத்தில் பழங்குடியினர் மக்கள் அதிகம் வசிக்கும் திரிபுரா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அகர்தலாவில் திரிபுரா பூர்வ குடிமக்கள் முன்னணி கட்சியினர் நடத்திய ஊர்வலத்தில் பங்கேற்ற பழங்குடியின மக்கள் காமன் சமூகம் என்ற இடத்தில் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர்.

பல வாகனங்களை தீ வைத்து அவர்கள் எரித்தனர். கடைகளை அடித்து நொறுக்கிய வன்முறையாளர்கள் ஏராளமான கார்கள் உள்ளிட்ட வாகனங்களையும் உடைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தடியடி நடத்தி வன்முறையாளர்களை விரட்டி அடித்தனர். வன்முறையில் ஈடுபட்ட பழங்குடியினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர். அகர்தலாவில் பதற்றம் தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>