திரிபுராவில் மழையால் கடும் பாதிப்பு: பெட்ரோல் விலை ரூ.300 மக்கள் போராட்டம்

திரிபுராவில் மழையால் கடும் பாதிப்பு: பெட்ரோல் விலை ரூ.300 மக்கள் போராட்டம்

திரிபுராவில் மழையால் கடும் பாதிப்பு: பெட்ரோல் விலை ரூ.300 மக்கள் போராட்டம்

அகர்தலா: திரிபுராவில் கனமழையால் அசாம்-திரிபுரா நெடுஞ்சாலை சேதமடைந்து, பெட்ரோல், டீசல் சப்ளை தடைபட்டது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.300க்கு விற்கப்பட்டதால் மக்கள் அதிருப்தியடைந்து போராட்டம் நடத்தினர். திரிபுராவில் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான இடதுசாரி ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அசாம் – திரிபுரா தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் மற்ற மாநிலங்களில் இருந்து பெட்ரோல், டீசல் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் திரிபுராவுக்கு வருகின்றன. கன மழையால் அந்த சாலை முற்றிலும் சேதமடைந்தது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சாலையை பழுது பார்க்கும் பணியும் தடைபட்டது. இதன் காரணமாக. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை கொண்டு வருவது முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, ‘ஸ்டாக் இல்லை’ என்ற போர்டுகள் தொங்கின. பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சில இடங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.300, டீசல் லிட்டர் ரூ.150 என விற்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுகணக்கானோர் தலைநகர் அகர்தலாவில் நெடுஞ்சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் பங்க்குகள் முன்பாக டயர்களை கொளுத்தி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சியான திரிணாமுல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதனால், பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமையை சமாளிக்க மாணிக் சர்க்கார் அரசு, தற்போது பெட்ரோல், டீசலுக்கு ரேஷன் முறையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் மாற்று எண் வாகன வரிசை முறையையும் அறிவித்துள்ளது. நிலைமை விரைவில்சீர் செய்யப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் பானுலால் சாகா உறுதி அளித்துள்ளார்.

திரிபுராவில் இடதுசாரிகள் ஆட்சி நடப்பதால், மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜ அரசும், அசாம் பாஜ மாநில அரசும் திரிபுராவுக்கு உரிய பொருட்கள் வரவிடாமல் தடுத்து விட்டன என்றும் அமைச்சர் பானுலால் சாகா குற்றம் சாட்டியுள்ளார். நிலைமையை சமாளிக்க ராணுவத்தை ஈடுபடுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என திரிணாமுல் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் மாணிக் சர்க்கார் பதவி விலக வேண்டும் என பாஜ போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>