திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா உறுப்பினர்களாக அங்கீகாரம்

201712110009446964_Tripura-speaker-recognises-6-TMC-deserters-as-BJP-MLAs_SECVPF

திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் இந்திய அரசியல் சட்டம் 10-வது அட்டவணை வழங்கியுள்ள வழிமுறைகளின்படி பா.ஜனதா உறுப்பினர்களாக அங்கீகரிக்க திரிபுரா சட்டசபை சபாநாயகர் தெரிவித்தார்

அகர்தலா:

திரிபுரா சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருந்த 6 பேர் கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். பின்னர் அதில் இருந்தும் விலகி கடந்த ஏப்ரல் மாதம் பா.ஜனதாவில் சேர்ந்தனர். பின்னர் தங்களை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகர் ரமேந்திர சந்திர தேப்நாத்திடம் மனு அளித்தனர்.

அந்த மனுக்களை இந்திய அரசியல் சட்டம் 10-வது அட்டவணை வழங்கியுள்ள வழிமுறைகளின்படி ஆய்வு செய்த சபாநாயகர், 6 எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜனதா உறுப்பினர்களாக அங்கீகரித்தார். 6 உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கிரசுடனான உறவுகளை முறித்துக்கொண்டு பா.ஜனதாவுடன் இணைந்திருக்கும் நிலையில், அவர்களை பா.ஜனதா உறுப்பினர்கள் என அங்கீகரிப்பது என அவர் முடிவு செய்துள்ளதாக சட்டசபை செயலாளர் மஜூம்தார் தெரிவித்தார்.

சபாநாயகரின் இந்த முடிவால் திரிணாமுல் சட்டசபையில் பா.ஜனதாவும் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. முன்னதாக 6 உறுப்பினர்களையும் பா.ஜனதாவினர் என அங்கீகரிப்பதில் தாமதம் செய்வதாக அந்த கட்சியினர் சபாநாயகரை விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>