திமுக 79 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகர், சட்டப்பேரவை செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: 79 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் வழக்கில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 79 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி பதில் தருமாறு சபாநாயகர், சட்டப்பேரவை செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜராகி வாதாடினார். 79 எம்.எல்.ஏ.க்களை சஸ்பென்ட் செய்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். சபாநாயகருக்கு அதிகாரம் தரும் பேரவை விதி 121 அரசியல் சட்டத்துக்கு எதிரானது என மு.க.ஸ்டாலின் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>