திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் மோடி

சென்னை கோபாலபுரம் இல்லத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் ‘தினத்தந்தி பவளவிழா’வில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். இதைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். அவருடன் ஆளுநர் பன்வாரிலார் புரோஹித்தும் வந்தார்.

நண்பகல் 12.10 மணிக்கு கோபாலபுரம் வந்த பிரதமர் மோடியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். எம்.பி., கனிமொழி பிரதமருக்கு சால்வை கொடுத்து வரவேற்றார். அப்போது, தி.மு.க முதன்மை நிலைச் செயலாளர் துரைமுருகன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், பிரதமரை கருணாநிதியிடம் அழைத்துச் சென்றார் மு.க.ஸ்டாலின். அப்போது, கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு பிரதமர் நலம் விசாரித்தார்.
modi-kar_jakkammaஅப்போது, முரசொலி பவளவிழா மலரை பிரதமர் மோடிக்கு கருணாநிதி பரிசாக வழங்கினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கருணாநிதியிடம் நலம் விசாரித்தார். 15 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்த பின்னர், பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் வழியனுப்பிவைத்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>