திமுக செயல் தலைவராகி ஓராண்டு நிறைவு: ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் வாழ்த்து

திமுக செயல் தலைவராகி ஓராண்டு நிறைவு: ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் வாழ்த்து

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், கு.க.செல்வம் எம்எல்ஏ, துறைமுகம் காஜா ஆகியோர்.

திமுக செயல் தலைவர் பொறுப்பில் ஓராண்டை நிறைவு செய்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 டிசம்பர் மாதம் முதல் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

திமுக பொருளாளராக கட்சியை வழிநடத்தி வந்த ஸ்டாலின், கடந்த 2016 ஜனவரி 4-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் செயல் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கருணாநிதி இல்லாமல் நடந்த முதல் பொதுக்குழுவில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரை முருகன் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினர்.

ஸ்டாலின் செயல் தலைவரான பிறகு அதிமுக ஏற்பட்ட உள்கட்சி குழப்பத்தால் கே.பழனிசாமி முதல்வரானார். சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பின்போது திமுக எதிர்ப்பு தெரிவிக்க பெரும் அமளி ஏற்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

அதன்பிறகு மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குட்கா விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை திமுக எழுப்பியது. உள்ளாட்சித் தேர்தல், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியை எதிர்த்து வழக்கு என அதிமுக அரசை எதிர்த்து பல்வேறு வழக்குகளையும் இந்த ஓராண்டில் திமுக தொடர்ந்தது.

ஸ்டாலின் செயல் தலைவரான பிறகு திமுக சந்தித்த முதல் தேர்தலான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அக்கட்சி டெபாசிட் இழந்தது. இது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில் செயல் தலைவர் பொறுப்பில் ஓராண்டை நிறைவு செய்துள்ள ஸ்டாலினுக்கு திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், கு.க.செல்வம் எம்எல்ஏ, துறைமுகம் காஜா ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>