தலித்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் ஒடுக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி

கடந்த 4 ஆண்டுகளாக, மக்களை பிரித்தாளும் மற்றும் சிகிப்பின்மை சக்திகள் சில தலைதூக்க முயற்சிக்கின்றன. அவர்கள் தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நலிவடைந்தோர் மீது நடத்தப்படும் தாக்குதல் நாட்டின் பண்புக்கு எதிரானது.

கடந்த 4 ஆண்டுகளாக, மக்களை பிரித்தாளும் மற்றும் சிகிப்பின்மை சக்திகள் சில தலைதூக்க முயற்சிக்கின்றன. அவர்கள் தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நலிவடைந்தோர் மீது நடத்தப்படும் தாக்குதல் நாட்டின் பண்புக்கு எதிரானது.

புதுடெல்லி: நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: கடந்த 4 ஆண்டுகளாக, மக்களை பிரித்தாளும் மற்றும் சிகிப்பின்மை சக்திகள் சில தலைதூக்க முயற்சிக்கின்றன. அவர்கள் தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நலிவடைந்தோர் மீது நடத்தப்படும் தாக்குதல் நாட்டின் பண்புக்கு எதிரானது. ஒழுக்க நெறியிலிருந்து விலகி செல்வது போன்றது. இந்த செயல் கடும் நடவடிக்கை மூலம் ஒடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் ஆன்மாவை அழிக்க அன்னிய மற்றும் உள்நாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த ஆன்மா வீறு கொண்டு எழுந்து அனைத்து சவால்களையும் முறியடிக்கிறது.

மதத்தின் பெயரில் உலகம் முழுவதும் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது. இந்த சக்திகளின் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சமீபத்தில் வெளிப்பட்டன. இந்த சக்திகள் தற்போது உலக சமுதாயத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது. இவர்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு பிரணாப் பேசினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>