தர்மபுரி:மகளிருக்கு ஒதுக்கீடு செய்த ஊராட்சியில் மக்கள் நடத்திய பொது விவாதம் பங்கேற்காத பெண் வேட்பாளர்கள்

2016-03-10-07-17-28%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf

தர்மபுரி : தர்மபுரி அருகே மல்லிக்குட்டை ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் மக்கள் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் கணவர்களே பங்கேற்று பதில் அளித்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது மல்லிக்குட்டை. மொத்தம் 4,200 வாக்காளர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் இதுவரை ஆண்களே தலைவர்களாக இருந்தனர். முதல் முறையாக இந்த தேர்தலில் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் பதவிக்கு ராணி, பச்சையம்மாள், சீதாராணி, ஜெயலட்சுமி, சுதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் கலந்து கொள்ளும் பொது விவாத மேடை காமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஊராட்சி வளர்ச்சிக்கு வைத்துள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள 5 பெண் வேட்பாளர்களும் பங்கேற்கவில்லை. 4 பெண் வேட்பாளர்களின் கணவர்களே பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறினர். சுதாவின் கணவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தலைவர்கள், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மணி மட்டும் பங்கேற்றார். மற்ற வேட்பாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அக்கிராம இளைஞர்கள் கூறுகையில், ‘’மல்லிக்குட்டை ஊராட்சியில் வாக்காளர்கள் 4200 பேரில், இளைஞர்கள் 1200 பேர் உள்ளோம். பொது விவாத மேடைக்கு ஏற்பாடு செய்தோம். ஒருவரும் பங்கேற்று எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க முன்வராதது வருத்தமே,’ என்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>