தம்பிதுரை, விஜயபாஸ்கர் பேட்டி நீட் தேர்வு விலக்கு பெறுவோம்

14-1492151158-thambidurai45453

புதுடெல்லி: நீட் தேர்வு விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை, மக்களைவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விஜயபாஸ்கருடன் தம்பித்துரை அளித்த பேட்டி: மருத்துவ கலந்தாய்வின்போது தமிழக மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடு என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. அதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுனர்களோடு அரசு சார்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்களிக்க மீண்டும் கோரிக்கை வைத்தும்.

தமிழக சட்ட மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவும் வேண்டுகோள் வைத்துள்ளோம். கோரிக்கை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சர் தமிழக அரசு மசோதா குறித்த எந்தவொரு ஆவணங்களும் தன்னிடம் இதுவரை வரவில்லை என்றும், மேலும் மத்திய உள்துறை செயலாளர் இல்லாத காரணத்தினால் இதுகுறித்து முழு விவரங்களையும் தற்போது கூற முடியாது. அதனால் உள்துறை செயலாளர் வந்தவுடன் பரிசீலனை செய்வதாக ராஜ்நாத்சிங் உறுதி அளித்துள்ளார். அதனால் நீட் தேர்வு விவகாரத்தில் இன்னும் 2 நாளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இதைத்தவிர உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டு அதை அவசர வழக்காக எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தில் வலியுறுத்த உள்ளோம்.இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>