தம்பிதுரை,விஜயபாஸ்கரை கண்டித்து செந்தில்பாலாஜி உண்ணாவிரதம்

C60IAY7VwAA2N_b

கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் இருக்க காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டிருப்பது ஆளுங்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்படும் என 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு 229 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தம்பிதுரை ஆகியோர் தடையாக இருப்பதாக செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீது செந்தில்பாலாஜி எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவக்கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்ற இருவரும் முயற்சி செய்துவருவதாக செந்தில்பாலாஜி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே மருத்துவக்கல்லூரி கட்டட பணிகளை தொடங்க வலியுறுத்தி 24ந் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு கரூர் ஆய்வாளருக்கு செந்தில்பாலாஜி எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளார்.

செந்தில்பாலாஜியின் இந்த நடவடிக்கையால் தம்பிதுரை உடனான பனிப்போரானது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏற்கனவே ஆளுங்கட்சி எம்எல்ஏ சில நாட்களுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்தார். மேலும் அதிமுக இரு அணிகளும் இணைக்கும் பணியில் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மும்மரமாக இருக்கின்றனர். இதனால் மக்கள் பணிகள் தொய்வடைந்துள்ள நிலையில் அமைச்சரை கண்டித்து ஆளுங்கட்சி எம்எல்ஏ உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>