தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரை வெளிப்படைத்தன்மையுடன் நியமிக்க வேண்டும்:பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

1443776788-3044

2005ஆம் ஆண்டு குழந்தை உரிமைக்கான பாதுகாப்பு ஆணையச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உரிமை மீறல்கள் குறித்து தீர விசாரித்து பரிந்துரை அளிக்கக்கூடிய சட்டபூர்வமாக ஆணையமாக அது செயல்பட்டுவருகிறது.

தமிழகத்தில் சமீபகாலமாக ஏராளமான குழந்தை உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகத் தான் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப் பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் காலியாக உள்ள தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21.07.2016 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இரண்டு மாதகால அவகாசத்திற்கு பிறகு எந்தவித வெளிப்படைத் தன்மை இல்லாமலும் அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணாகவும் அரசியல் பிண்ணனி கொண்ட திருமதி கல்யாணி மதிவாணன் என்பவரை குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. திருமதி கல்யாணி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த போது பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் (2.9.2016) சென்னை உயர்நீதிமன்றம், குழந்தை உரிமைகள் தொடர்பாக அனுபவமும், நிபுணத்துவமும் இல்லாத கல்யாணி மதிவாணன் எந்த அடிப்படையில் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் என்று வினவியுள்ளது.  இதற்கான சரியான விவரத்தை அளிக்காவிட்டால் நியமன ஆணையை நீதிமன்றமே ரத்து செய்யும் என்றும் தமிழக அரசை எச்சரித்துள்ளது.

எனவே, தமிழக அரசு இந்த ஆணையத்தின் தலைவராக விதிமுறைகளின்படி வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்றி முறையான குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பியலில் நிபுணத்துவம் பெற்றவரை  நியமிக்க வேண்டும். ஆளும் கட்சியின் உறுப்பினராக அல்லது அனுதாபியாக இருப்பது மட்டுமே ஒற்றைத் தகுதியாகக் கொண்டு சட்டப்பூர்வமான ஆணையங்களுக்கு தலைவர்களை நியமிக்கும் பாரபட்சப் போக்கை அதிமுக அரசு கைவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>