தமிழர்களை தலை நிமிர செய்த நாள்-நவ.27

விடுதலை போரில் வீரமரணமடைந்த போராளிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்க பொதுக்கூட்டம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆதவன் தலைமையில் நடைபெற்ற இந்த வீரவணக்க பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு ஈகச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, தலைமை நிலைய செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், ஏசி பாவரசு,இளஞ்சேகுவேரா,உஞ்சையரசன், மாவட்ட செயலாளர்கள் ரவிசங்கர், ஆதவன், விருகை சட்டமன்ற தொகுதி செயலாளர் கரிகால்வளவன் உள்ளிட்ட ஏராளமான விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திருமாவளவன், நவம்பர் 26 தலைவர் பிரபாகரன் பிறந்தநாள், தமிழர்களை தலை நிமிர செய்த நாள், நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த இரண்டு உன்னதமான நிகழ்வுகளையும் இணைத்து தமிழர் மாதம் என நாம் பெருமைகொள்ளும் சிறப்பு வாய்ந்தது நவம்பர் மாதம்.
ஈழவிடுதலை களத்தில் முதல் உயிர் பலியான தோழர் சங்கரனின் நினைவு நாளையே மாவீரர் நாளாக கடைபிடிக்க தலைவர் பிரபாகரன் ஆணையிட்டார்
2009-க்கு பிறகு மாவீரர் நாளன்று தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையை கேட்க நம்மால் முடியாமல் போனது.
அதன் பிறகு ஈழத்தில் மாவீரர் நாளை நாளை கொண்டாட முடியாமல் இருப்பதும், தமிழகத்தில் கொண்டாட இன்றும் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.
இலங்கையில் கடுமையான அரசியல் நெருக்கடி சூழ்நிலை நிலவி வருகிறது, மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்ஷ ஆகியோரின் கூட்டுச் சதி முறியடிக்கப்பட்டது
ஈழத்தில் தமிழ் சமூகத்தை வழிநடத்த, தலைமை கொள்ள வெற்றிடம் நிலவுகின்றது மிகவும் வேதனை அளிக்கிறது
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் பிறகும் கூறிய பிறகும் பிறகும் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர் அதனை தடுத்து வருகிறார்
ஏழு பேரை விடுதலை செய்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக விற்கு விற்கு தேர்தலில் பாஜக விற்கு வலுசேர்க்கும் ஆனாலும் அவர்கள் ஏன் செய்யவில்லை?

தற்போது நிலவும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடுகளை உற்றுநோக்கி வருகிறோம். கவர்னர் பெருபான்மை கொண்ட தரப்பினரை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டப்படி நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தற்போது நிலவும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடுகளை உற்றுநோக்கி வருகிறோம். கவர்னர் பெருபான்மை கொண்ட தரப்பினரை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டப்படி நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தலைவர் பிரபாகரனைப் போன்ற ஒரு மாவீரனை நம்மால் இனி காண முடியுமா என்றால் நிச்சயம் முடியாது, ஆயுதம் ஏந்தி போராடும் சூழலும் இன்று அங்கு இல்லை, எனவே நாடாளுமன்ற ஜனநாயக பாதையை நோக்கி இலக்கை அடைய தமிழ் தேசிய அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.
பிஜேபியும் ஆர்எஸ்எஸ்-ம் மொழிவழி தேசியமாக பார்க்காமல் மதவழி தேசியமாக பார்க்கின்றனர், இந்துத்துவ தேசியமாக பார்க்கின்றனர். அவர்களின் கையில் இந்த தேசம் சிக்கி கொள்ள கூடாது. அதற்காகவே இந்த தேசத்தை காப்பாற்ற சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.
அந்தத் தேவைக்காகவே தேசம் காப்போம் மாநாட்டை நாம் முன்னெடுக்கின்றோம்
தமிழ் தேசியத்தின் கொள்கை வேறு இந்திய தேசியத்தின் கொள்கை வேறு இதை நாம் முழுமையாக உணர வேண்டும். தமிழ் தேசியம் பேசும் தோழர்களே வாருங்கள் விவாதிப்போம்.
நமது இறுதி இலக்கு தமிழ் ஈழத்தை வென்றெடுப்பதே. தமிழ் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற பாதையில் இருந்து விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும் விலகாது
சனாதன பயங்கரவாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆணவ கொலைகள் அதிகரிக்கும், சாதி வெறி கொலைகள் அதிகரிக்கும்.
மதவெறியர்கள் அதிகமாக அதிகமாக மானுடத்தின் வாழ்வு கேள்விக்குறியாகி விடும், அவர்களிடம் இருந்து இந்த தேசத்தை காப்பாற்ற வேண்டும்
தேசம் காப்போம் என்பது மதவெறியர்களுக்கு எதிரானது, இந்துத்துவ சக்திகளுக்கு எதிரானது, சனாதனவாதிகளுக்கு எதிரானது. தமிழ் தேசியத்தை வென்றெடுப்பது என மாவீரர் நாளில் நாம் உறுதி ஏற்போம் என கூறினார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>