தமிழர்களின் உரிமையை மீட்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்;முத்தரசன் சந்திப்பு

2016-19-9-17-06-34jn

காவிரிநீர் விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை மீட்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வாழ்த்து.

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை மீட்கக்கோரி சென்னை தாயகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லயோலா கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் காவிரி பிரச்சினையில் மத்தியில் காங்கிரஸ், பாஜக யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் இழைத்து வருவதாகவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்க வேண்டும் அனைத்து தரப்பினரும் போராடும் நிலையில், அந்த கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களைச் சந்தித்து போராட்டம் வெற்றியடைய வாழ்த்த வந்ததாகவும், மேலும் மாணவர்களின் உணர்வுகளை மதிப்பளித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைத்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் இதுகுறித்து பேசிய மாணவர் யுவராஜ், தமிழர்களின் உரிமையை மீட்க மாணவர்கள் என்ற உணர்வோடு ஒன்றாக இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆனால் ஒரு சிலர் தங்களின் போராட்டத்துக்கு ஒரு சில கட்சியும், அமைப்பும் பின்புலமாக இருப்பதாக தங்களது போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாகவும், தாங்கள் எந்த அமைப்பைச் சார்ந்தோ, கட்சியியைச் சார்ந்தோ இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, எங்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தவேண்டாம் எனக் கேடுக்கொண்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>