தமிழக முதல்வர்ஜெயலலிதா பிறந்த நாள் பரிசு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 17-ம் தேதி இறுதி விசாரணை

2016-20-9-12-35-52b

டெல்லி: பிறந்தநாள் பரிசாக ஜெயலலிதா ரூ. 1.5 கோடி பெற்றது குறித்த சிபிஐ வழக்கு நவம்பர் 17ல் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. கடந்த 1992ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளில் பல்வேறு இடங்களில் இருந்த பரிசுகள் வந்தன. இதில் 57 பேரிடமிருந்து 89 டிடிகளும், 3 லட்சம் அமெரிக்க டாலரும், ரொக்கப்பணமும் மொத்தம் ரூ. 2 கோடி வந்தது. முதல்வராக பதவி வகித்து வருபவர் தனக்கு வரும் அன்பளிப்பு மற்றும் பரிசுகளை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.

ஆனால், ஜெயலலிதா தனது சொந்த வங்கிக் கணக்கில் இந்த பரிசு பணத்தை டெபாசிட் செய்துள்ளார். இது குறித்து கடந்த 1996ல் சிபிஐ விசாரணை நடத்தி ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பரிசுப் பணத்திற்கு ஏற்பாடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெறும் நிலையில், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில் சிபிஐ காலதாமதம் செய்துள்ளது.

எனவே, இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று கடந்த 2011 செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவில் வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சிபிஐ கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து வழக்கை நவம்பர் 17-ம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>