தமிழக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது

 

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது

முதல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக மக்களின் தற்போதைய முக்கிய பிரச்னையான தொடர் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னை, குறிப்பாக சமீபத்தில் கூலிப்படையினரால் நடைபெறும் கொலை சம்பவங்கள்,
பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணை பிரச்னை, கோயில், பள்ளி மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவது, தமிழக மீனவர்கள் பிரச்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்காதது, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னை, மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளை தினசரி சட்டப்பேரவையில் எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது

 

சென்னை : தமிழக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
அதிமுக அரசு 2வது முறை பதவியேற்றபின், முதன் முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மே மாதம் புதிய ஆட்சி அமைந்த பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த மாதம் 16ம் தேதி கூடியது. அதைத்தொடர்ந்து 4 நாட்கள் கவர்னர் உரை மீது விவாதம் நடத்தப்பட்டு, கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வார்.

பட்ஜெட் உரை வாசித்து முடிந்ததும், சட்டப்பேரவை கூட்டம் முடிவடையும். பின்னர், சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, அதைத்தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும். இன்று பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து ஒரு மாதம் வரை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பேரவை கூட்டம் நடைபெறாது. இந்த பட்ஜெட்டில், தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு திட்டங்கள் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்வதால், பொிய அளவிலான முக்கிய அறிவிப்பு எதுவும் இடம் பெறாமல்,

 

சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் நாட்களில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா முக்கிய அறிவிப்புகளை வௌியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

தமிழகத்தில் மே மாதம் நடந்து முடிந்த தேர்தலில், திமுக 89 இடங்களில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
மேலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடம் என மொத்தம் 4 கட்சி உறுப்பினர்களே சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் பெரிய கட்சியாக அதிமுக, திமுக மட்டுமே உள்ளது. தமிழக மக்கள் பிரச்னைகள் பற்றி சட்டப்பேரவையில் திமுக சார்பில் வலுவான வாதங்களை எடுத்து வைக்கும் என்று ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று
. இதனால், சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதத்துக்கு பஞ்சம் இருக்காது. ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சியான திமுக எழுப்பும் பிரச்னைகளுக்கு பதில் அளிக்க தயாராகி வருகிறார்கள்.

 

 

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>