தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற தொகுதி கொளத்தூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற தொகுதி கொளத்தூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஜி,கே.எம். காலனியில் உள்ள அரசினர் மேல் நிலைப் பள்ளியில் முதலில் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை புனரமைக்கவும், கூடுதல் கட்டிடங்கள் கட்டுவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, 600 மாணவ, மாணவியர் படிக்கும் அந்த பள்ளியில் குடிநீர் தொட்டி முறையாக அமைக்கப்படாமல் இருப்பதால் மாநகராட்சி சார்பில் குடி நீர் வழங்கப்படவில்லை எனவும், மின் சாதன பொருட்கள் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது,பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை புனரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டார்.

ஜி,கே.எம். காலனியில் உள்ள அரசினர் மேல் நிலைப் பள்ளியில் முதலில் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை புனரமைக்கவும், கூடுதல் கட்டிடங்கள் கட்டுவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, 600 மாணவ, மாணவியர் படிக்கும் அந்த பள்ளியில் குடிநீர் தொட்டி முறையாக அமைக்கப்படாமல் இருப்பதால் மாநகராட்சி சார்பில் குடி நீர் வழங்கப்படவில்லை எனவும், மின் சாதன பொருட்கள் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் குடிநீர் தேவையை முன்னிட்டு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு உரிய நடவடிக்கையை உடனே எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்திய தளபதி அவர்கள், பள்ளியில் இருண்ட நிலையில் பாழடைந்துள்ள சத்துணவுக் கூடத்தை புதிதாக கட்டித் தரவேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

அதனையடுத்து, ராஜா தோட்டம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தளபதி மு.க.ஸ்டாலின், கிட்டதட்ட 44 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட அந்த குடியிருப்புகளில், தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்களை புனரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அப்போது அங்கு திரண்டு வந்த குடியிருப்பு வாசிகள் காலியாக உள்ள சுமார் 700 சதுர அடி நிலப்பரப்பில் ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து சமுதாயக் கூடம் அமைத்து தருவதாக ஸ்டாலின் உறுதியளித்தார்.

தொடர்ந்து, ஜமாலியா குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட ஸ்டாலின், இதனைத் தொடர்ந்து கெளதமபுரம் பகுதியில் உள்ள ரமணா நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் ஆய்வு செய்தார். அந்த குடியிருப்பு பகுதிகளில் பாழடைந்த கட்டடங்களை புனரமைக்கவும், உரிய முறையில் பராமரிக்கவும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.

ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதை அறிந்து அப்பகுதிகளில் திரண்ட ஏராளமான பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட ஸ்டாலின் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>