தமிழக ஆம்னி பேருந்துள் எரிக்கப்பட்ட விவகாரம் : கர்நாடகா ரூ.75 கோடி இழப்பீடு தர கோரிக்கை

daily_news_7530437707902

சென்னை: காவிரி விவகாரத்தில் நடைபெற்ற வன்முறையில் கன்னட போராட்டக்காரர்களால் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் எரிக்கப்பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.75 கோடி தர வேண்டும் என கர்நாடக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுளது. சென்னையில் நடைபெற்ற ஆம்னி பேருந்துகள் சங்க செயற்குழு கூட்டத்தில் ரூ.75 கோடி இழப்பீடு கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கர்நாடக ஆம்னி பேருந்துகள் பாதிப்பில்லாமல் இயங்குவது போல, கர்நாடகத்திலும் ஆம்னி பேருந்துகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியுள்ளனர். கோரிக்கை நிறைவேறும் வரை கர்நாடக ஆம்னி பேருந்துகள் இயங்க ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>