தமிழக அரசை கலைக்க வேண்டும்: மு.க ஸ்டாலின்

2017-13-08-09-22-54

சென்னை: தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். லண்டன் செல்லும்முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர் செல்வமோ, எடப்பாடி பழனிச்சாமியோ யார இருந்தாலும் கவலை இல்லை என்று கூறினார்.

நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், மக்கள் படும் அவதிகளுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்பதற்காகவும் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். ஒரு வாரம் தங்கி இருந்து 20ம் தேதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>