தமிழக அரசு மீது சிஏஜி சரமாரி குற்றச்சாட்டு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முறைகேடுகளும், திட்டமிடாமல் செயல்பட்டதால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடுகளும், திட்டங்கள் முடக்கத்தால் பல நூறு கோடி ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் சரமாரியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முறைகேடுகளும், திட்டமிடாமல் செயல்பட்டதால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடுகளும், திட்டங்கள் முடக்கத்தால் பல நூறு கோடி ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் சரமாரியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முறைகேடுகளும், திட்டமிடாமல் செயல்பட்டதால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடுகளும், திட்டங்கள் முடக்கத்தால் பல நூறு கோடி ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் சரமாரியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான கடந்த 2ம் தேதி சிஏஜி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில், 2014-15ம் ஆண்டுக்கான தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், கூவம் ஆற்றை தூய்மை படுத்தும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடி பயன்படுத்தப்படவில்லை. மோேனா ரயில் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த புள்ளி இறுதி செய்யப்படாததால் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. நந்தம்பாக்கத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டது. அதில் முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக குறிப்பிட்டு இருந்தது. ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதால் அந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ரூ.100 கோடி திருப்பி அனுப்பப்பட்டது. இவ்வாறு இந்த 3 திட்டங்கள் மூலம் ரூ.800 கோடி பயன்படாமல் திருப்பிவிடப்பட்டதால், அந்தப் பணம் ஓராண்டாக வீணாகி கிடந்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் தினமும் ரூ.40 கோடி வரை இழப்பை சந்தித்திருப்பதாகவும், கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.14,869 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அம்மா உணவகத்துக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ.5.69 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வேலை செய்யாத மிஷின்களால் ரூ.22.2 லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. சப்பாத்தி மிஷின்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவில்லை. இப்படிப்பட்ட பிரச்னைகள் இருக்கும்போது மேலும் 9 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது. வேலை ஆட்கள் நியமிப்பதில் மாநகராட்சிகள் சரிவர செயல்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட குறைந்த அளவில் முதல்வரின் காப்பீடு அட்டை வழங்கப்பட்டதால் அரசுக்கு சுமார் ₹7 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டத்திலும் பயங்கர குளறுபடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் வீடு இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதில் பெரிய அளவில் குளறுபடி நடந்திருக்கிறது.தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டத்துக்கு நிதி ஒதுக்கியதில் காலதாமதம் செய்ததால் மாணவர்களுக்கு கல்வியாண்டு முடிந்த பின்பு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இது அந்த திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை. மேலும் 724 லேப்டாப்கள் திருடுபோயுள்ளன. இதன் மூலம் தமிழக பள்ளி, கல்லூரிகள் பாதுகாப்பானதாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் 173 காற்றாலை நிறுவனங்களிடமிருந்து மின் கொள்முதல் நிறுத்தியதன் மூலம் ரூ.60.59 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தில் போதிய நிதி இல்லை என்பதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். மக்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட 60 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இதனால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் வீணாகியிருக்கிறது.இவ்வாறு சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படாமல் போகக் கூடிய வாய்ப்பிருப்பதை அறிந்தவுடனேயே, அந்த நிதியை தேவைப்படும் பிற துறைகளுக்கு வழங்கும் வகையில், இந்த நிதி ஒதுக்கீடுகளை ஒப்படைப்பு செய்வதை உறுதி செய்யும் வகையில் இதற்கான அறிவுறுத்தல்களை அனைத்துத் துறைகளுக்கும் வழங்க அரசு பரிசீலிக்கலாம். எதிர்பாராத செலவு நிதியில் இருந்து எடுக்கப்படும் நிதிகளின் பயன்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>