தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை

சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அதிமுக ஆட்சியில் அரசின் கடன் இரண்டரை லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் கடனுக்கு வட்டி மட்டும் ரூ.21.215 கோடியை ஓராண்டில் அரசு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், கடனை அடைப்பதற்கோ, குறைப்பதற்கோ பட்ஜெட்டில் வழி சொல்லப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
* தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும் தேர்தலை சந்தித்து மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசின் பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி

சமூக நலத்துறைக்கு ரூ.4,512 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக் கல்வித் துறைக்கு 24,130 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்த ரூ.330.60 கோடி ஒதுக்கீடு.

அனைவருக்கும் கல்வி வழங்க ரூ.125.70 கோடி ஒதுக்கீடு.

வனத்துறைக்கு நிதி ரூ.652.78 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை 44% அதிகரித்துள்ளது.

தமிழக உயர் கல்வித் துறைக்கு ரூ.3,679 கோடி ஒதுக்கீடு. அதிமுக ஆட்சியில் அரசின் கடன் இரண்டரை லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் கடனுக்கு வட்டி மட்டும் ரூ.21.215 கோடியை ஓராண்டில் அரசு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், கடனை அடைப்பதற்கோ, குறைப்பதற்கோ பட்ஜெட்டில் வழி சொல்லப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும் தேர்தலை சந்தித்து மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசின் பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
இடை நிலை கல்வி திட்டத்துக்கு ரூ.1,139 கோடி நிதி ஒதுக்கீடு.

மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மடிக்கணினி, இலவச சீருடை திட்டத்துக்கு ரூ.2705 கோடி ஒதுக்கீடு.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி செலவுக்கு ரூ.580 கோடி ஒதுக்கீடு.

போக்குவரத்துத் துறைக்கு 1,295.08 கோடி ஒதுக்கீடு.

தீயணைப்புத் துறைக்கு ரூ.230.7 கோடி ஒதுக்கீடு.

தொழிற்துறைக்கு ரூ.2104 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகத்தில் சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்களுக்கு ரூ.1,230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கால்நடைத்துறைக்கு ரூ.1188 கோடி ஒதுக்கீடு.

பால்வளத்துறைக்கு ரூ.121 கோடி ஒதுக்கீடு.

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.68.62 கோடி ஒதுக்கீடு.

சிறைக் காவல்துறைக்கு ரூ.282.92 கோடி ஒதுக்கப்படுகிறது.

ஊரக வளர்ச்சித் துறைக்கு 21,186 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

முத்துலட்சுமி மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ.668 கோடி ஒதுக்கீடு.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.9,073 கோடி ஒதுக்கீடு.

தொட்டில் குழந்தை திட்டத்துக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு.

ஆறுகள் புத்துயிர் திட்டத்தின் கீழ் ரூ.24.58 கோடி நிதி ஒதுக்கப்படும்.

சென்னை: படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்துவிட்ட 500 கடைகள் மட்டும் மூடப்பட்டுள்ளதாகவும், மதுக்கடைகள் அனைத்து எப்போது மூடப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

* சென்னையில் மோனா ரயில் திட்டம் செயல்படுத்துவது பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இல்லை என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல ஆண்டுகளாக மோனா ரயில் பற்றி அறிவிப்புகளை அதிமுக அரசு வெளியிட்டது. ஆனால் நடப்பு பட்ஜெட்டில் மோனா ரயில் பற்றி எதுவும் கூறப்படவில்லை

* தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும் தேர்தலை சந்தித்து மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசின் பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>