தமிழக அரசின் வழக்கை சந்திக்க தயார் ஒரு டிஎம்சி கூட தர முடியாது

கர்நாடக மாநில காவிரி டெல்டா பகுதியில் உள்ள 4 அணைகளிலும் சேர்த்து 51 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதால், தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறக்க முடியாது என்று கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தமிழக அரசு போட்டுள்ள வழக்கை சந்திக்க தயார்  என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில காவிரி டெல்டா பகுதியில் உள்ள 4 அணைகளிலும் சேர்த்து 51 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதால், தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறக்க முடியாது என்று கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தமிழக அரசு போட்டுள்ள வழக்கை சந்திக்க தயார் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு: கர்நாடக மாநில காவிரி டெல்டா பகுதியில் உள்ள 4 அணைகளிலும் சேர்த்து 51 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதால், தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறக்க முடியாது என்று கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தமிழக அரசு போட்டுள்ள வழக்கை சந்திக்க தயார் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் விஷயத்தில் கர்நாடக-தமிழகம் இடையே சர்ச்சை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தும் நிலையில் இருப்பதால், தமிழக விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது இயலாத காரியம் என்று அம்மாநில அரசு தொடர்ந்து கைவிரித்து வருகிறது. இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக மாநில அரசு ஆகஸ்ட் மாதம் திறந்துவிட வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனு வரும் செப்டம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

விசாரணையின் போது கர்நாடக அரசின் சார்பில் உரிய பதிலளிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூரு விதானசவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் டி.வி.சதானந்தகவுடா, ஆனந்த்குமார், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில அமைச்சர்கள் ஜி.பரமேஸ்வர், டி.பி.ஜெயந்திரா, எம்.பி.பாட்டீல், எச்.கே.பாட்டீல், சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர், சட்டபேரவை மஜத தலைவர் எச்.டிகுமாரசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.வீரப்பமொய்லி, ஆஸ்கர் பெர்ணான்டஸ், பி.சி.மோகன், டி.கே.சுரேஷ், முன்னாள் அமைச்சர்கள் பசவராஜ்பொம்மை, ஆர்.அசோக், மூத்த வக்கீல் மோகன்கதார்கி, மாநில வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான சாதக-பாதகம் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தின் முடிவில் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டா பகுதியில் 45 சதவீத நீர்வரத்து குறைவாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் 18.60 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. கபினி அணையில் 15 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஹேமாவதி, ஹாரங்கி உள்பட 4 அணைகளில் உள்ள தண்ணீரையும் சேர்த்து மொத்தம் 51 டிஎம்சி மட்டுமே உள்ளது.

பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகரம் மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க 40 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. இது தவிர டெல்டா பகுதியில் விவசாயிகள் பயிர் செய்துள்ள நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் அறுவடை நிலையில் உள்ளதால் அதற்கும் தண்ணீர் கொடுக்க வேண்டும். தற்போது அணையிலுள்ள தண்ணீர் மாநிலத்திற்கு போதுமானதாக இல்லாத சூழ்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எப்படி முடியும்.
இதை நேற்று என்னை சந்தித்த தமிழக விவசாய சங்கத் தலைவரிடமும் ‘தெளிவாக எடுத்துக்கூறியுள்ளேன். நமது மாநில அணைகளில் டெட் ஸ்டோரேஜ் நிலைக்கு சென்றுள்ளதால் தண்ணீர் திறக்கும் விஷயத்தில் நாம் யோசிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நமது மாநில டெல்டா பகுதியில் சூழ்நிலை இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளது. அம்மனு மீதான விசாரணை வரும் செப்டம்பர் 2ம் தேதி நடக்கிறது.

வழக்கை சந்திக்க நாங்கள் தயார்; விசாரணையின் போது, மாநில அரசின் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பதில் மனுவாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். மேலும் மூத்த வக்கீல் பாலி.எஸ்.நாரிமனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது முடிந்தவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறினார். இதையும் நான் கவனத்தில் கொண்டு வருகிறேன். தமிழக வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். தற்போதைய சூழ்நிலையில் ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறந்துவிட வாய்ப்பில்லை என்றார். கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களும் தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடமுடியாது என்ற முடிவை ஆணித்தரமாக உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசாங்கத்திற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

* காவிரியில் ஆகஸ்டில் திறந்துவிட வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை திறக்க கேட்டு தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். செப்.2ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

* காவிரி டெல்டா பகுதியில் உள்ள 4 அணைகளிலும் சேர்த்து 51 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதாக அனைத்துகட்சி கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்.

* தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்ற தீர்மானம் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இதை தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>