தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது வெட்கக்கேடானது என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் .

தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது வெட்கக்கேடானது என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது வெட்கக்கேடானது என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை: தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது வெட்கக்கேடானது என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் 2016 -17ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை மாநில நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பு, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மாறிவிட்டதாக கூறினார்.

விவசாயிகளின் வருவாய் 3 மடங்கு அதிகரிக்கப்படும் என அரசு கூறியிருந்தது. ஆனால் உண்மையிலேயே தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தான் நீடிப்பதாக கூறினார். ஏற்கனவே அரசு அறிவித்த மோனோ ரயில் திட்டம் குறித்து பட்ஜெட்டில் ஏதும் இல்லை என்றார். மேலும் சென்னையில் அறிவுசார் பூங்கா அமைக்கம் திட்டம் பற்றியும் பட்ஜெட்டில் கூறப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நிதி நிலை அறிக்கை வெற்று அறிக்கையாக உள்ளதாக கூறியுள்ளார். நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான திட்டம் ஏதும் பட்ஜெட்டில் இல்லை என சாடியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>