தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்:ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் வழங்க கோரிக்கை

 போக்குவரத்து கழகங்கள், ஓய்வு பெற்றோருக்கு வழங்க வேண்டிய ரூ.6,000 கோடியை முறைகேடாக செலவிட்டனர் என்பது புகார்.

போக்குவரத்து கழகங்கள், ஓய்வு பெற்றோருக்கு வழங்க வேண்டிய ரூ.6,000 கோடியை முறைகேடாக செலவிட்டனர் என்பது புகார்.

சென்னை: ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் வழங்க கோரி போக்குவரத்து துறை ஊழியர்கள் போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள பனிமனைகள் முன்பு காலையிலேயே போக்குவரத்து தொழிலாளர்கள் கூடினர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். காஞ்சிபுரத்தில் பணிமனை முன்பு குவிந்த ஓய்வூதிய தாரர்கள் பேருந்துகளை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதே போல் விருதுநகர் பணிமனை முன் முற்றுகையிட்ட தொழிலாளர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை போக்குவரத்து அலுவலகம் முன் குவிந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பின.

விழுப்புரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இன்று காலையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதே போல் சிவகங்கை பணிமனை முன்பும் அனைத்து தொழிலாளர்களும், அதிகாலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழகங்கள், ஓய்வு பெற்றோருக்கு வழங்க வேண்டிய ரூ.6,000 கோடியை முறைகேடாக செலவிட்டனர் என்பது புகார். மேலும் போக்குவரத்து கழகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது என்பதும் தொழிலாளர்களின் குற்றச்சாட்டு ஆகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>