தமிழகம் முழுவதும் : ஓட்டை கொள்ளை தொடர்கிறது

சென்னை வந்த ரயிலில் ஓட்டை போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பரவலாக ஓட்டை போட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

சென்னை வந்த ரயிலில் ஓட்டை போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பரவலாக ஓட்டை போட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

சென்னை வந்த ரயிலில் ஓட்டை போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பரவலாக ஓட்டை போட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூ.6 கோடியை மர்ம நபர்கள் மேற்கூரையில் ஓட்டை போட்டு கொள்ளையடித்து சென்றனர். ஓடும் ரயிலில் நடந்ததாக முதலில் சொன்ன போலீஸ், சேத்துப்பட்டில் நிற்கும் போது தான் கொள்ளை நடந்திருக்கலாம் என்று பின்னர் கூறியது; ஆனால், இதுவரை துப்பில்லை. இந்த கொள்ளைச் சம்பவத்தால் அதிர்ந்துபோன தமிழக அரசு, உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஏடிஜிபி, ஐஜி, 4 எஸ்பிக்கள், 100 போலீசார் களம் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அதோடு, சென்னை, சேலம் சட்டம் ஒழுங்கு போலீசாரும் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கின்றனர். ரயில்வே போலீசார் ஒருபுறம் விசாரித்து வருகின்றனர். இவ்வளவு பேரும் மூலைமுடுக்கெல்லாம் விசாரணை நடத்தினாலும் இதுவரை ஒரு துளி முன்னேற்றம் கூட ஏற்படவில்லை.

ஓட்டை சம்பவங்கள்: இந்த ரயில் கொள்ளைக்குப் பிறகு தமிழகத்தில் ஆங்காங்கே சுவரில் ஓட்டை போட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சில மாதங்களுக்கு முன்பு, கூட்டுறவு வங்கியின் பின்பக்க சுவரில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அலாரம் ஒலித்ததால் ஓட்டம் பிடித்தனர். இதற்கடுத்த சில நாட்களில் அரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். ஆனால், இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி பொதுத்துறை வங்கியில் கடந்தாண்டு சுவரில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள், 6000 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் இதுவரை பிடிபடவில்லை. பிடிபட்டவர்கள் 3 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொள்ளையில் தொடர்புடையவர்கள் மேலும் பல கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தாலும், குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி, கெலமங்கலம் கூட்டுறவு வங்கிகளில் ஓட்டை போட்டும், காம்பவுண்ட் சுவரை உடைத்தும் மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். ஆனால், லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேபோல, சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 16ம் தேதி, பின்பக்க ஜன்னலை உடைத்து 5.5 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் மருதை மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் சுரேஷ் என்பவர் நகைக்கடை நடத்தி வந்தார்.

கடந்த 11ம் தேதி காலை கடையை திறந்தபோது தரைப்பகுதியில் பெரிய பள்ளம் இருந்தது. கண்காணிப்பு கேமராக்களும் உடைக்கப்பட்டிருந்தது. கொள்ளையர்கள் கடையின் பின்புறம் வழியாக சுரங்கம்தோண்டி, கடைக்குள் வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. லாக்கரை உடைத்து அதில் இருந்த ஒன்றரை கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும். கடந்த 2007ம் ஆண்டு இதே கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. மறு நாள் 16ம் தேதி கடையை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடையின் பின்பக்க சுவரில் பெரிய துளை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் ரூ 53 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மட்டும் கொள்ளையடித்து சென்றனர். பணம் இல்லாததால் கொள்ளை போகவில்லை. இதுவரை உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது முறையாக டாஸ்மாக் கடை சுவரை உடைத்து கொள்ளை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3 முறையும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

ஓட்டை கேடிகள்: தமிழகத்தில் இவ்வாறு சுவரில் ஓட்டை போட்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் யாரும் பிடிபட்டது இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாகிவிட்டது. அவர்கள் தொடர்ந்து இந்த பாணியை கையாளத் தொடங்கி விட்டனர்.
குற்ற சம்பவங்களைப் பொறுத்தவரை ஒரு குற்றம் நடந்து, குற்றவாளியை பிடிக்க முடியவில்லை என்று தெரிந்தால், கொள்ளையர்கள் உடனடியாக இந்த புதிய பாணியில் கொள்ளையடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுபோலத்தான் இப்போதும், ஓட்டை போட்டு கொள்ளையடிக்கும் யுக்தியை கையாண்டு கொள்ளையடிக்கத் தொடங்கி விடுகின்றனர். இது போலீசாருக்கும் பெரும் சவாலாகவே உள்ளது.
ஓட்டைக்கு யார் காரணம்: போலீசார் செல்லும் காரணம், வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வேலைக்காக தமிழகத்தில் வந்து தங்குகின்றனர். அவர்கள் பெயர், முகவரி எல்லாவற்றிலும் தவறான தகவலையே தெரிவிக்கின்றனர். கூலி வேலைக்காக வருகிறவர்களை நாம் சொந்த ஊருக்குச் சென்று விசாரிப்பதில்லை.

இதனால் அவர்கள் இதுபோன்ற கொள்ளைகளை செய்துவிட்டு சொந்த ஊருக்கு தப்பி விடுகின்றனர். இதனால்தான் அவர்களைப் பிடிக்க முடியவில்லை என்கின்றனர். ஆனால், போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்காமல் வடமாநில அப்பாவி தொழிலாளர்கள் மீது பழியைப் போட்டு தப்பிக்க பார்க்கின்றனர் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். முன்பெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில்தான் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடக்கும். ஆனால் இப்போது, ஆள் நடமாட்டம் இருக்கும் மெயின் ரோட்டிலோ, பஜாரிலோதான் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன. ஏன், ஓடும் ரயிலில் பல நூறு பொதுமக்கள் பயணம் செய்யும் ரயிலிலேயே ஓட்டை போட்டு கொள்ளையடிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் கொள்ளையை கண்டுபிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. போலீசாரின் பாதுகாப்பு பணியை அதிகரித்து குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

போலீஸ்துறை குறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க உள்ளார். இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால், அதற்குள் குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். ஆனால், இதுவரை வழக்கில் ஒரு சிறிய முன்னேற்றம் கூட காணப்படவில்லை.

நாகர்கோவிலை சேர்ந்தவர் தனிஷ்லாஸ் (56). கட்டிட கான்ட்ராக்டரான இவர் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் விவேகானந்தர் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த ஏப்.2ம் தேதி மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நாகர்கோவில் சென்றார். மறுநாள் காலை வீடு திரும்பியபோது பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

சுவரில் துளை போடப்பட்டு இருந்தது. பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தது. பீரோக்களில் வைத்திருந்த 70 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். கொள்ளையர்கள் சுவரில் துளை போட்டு அதன் வழியாக சிறுவனை வீட்டுக்குள் இறக்கி கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், பின்னர் பின் பக்க கதவை உடைத்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இந்த கொள்ளையில் இதுவரை துப்பு துலங்கவில்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>