தமிழகத்துக்கு வர கர்நாடக ஆம்புலன்சுகள் மறுப்பு: பெங்களுருவில் சிகிச்சை பெற்ற மூதாட்டி தவிப்பு

daily_news_2146526575089

தருமபுரி: தமிழகத்துக்கு வர கர்நாடக ஆம்புலன்சுகள் மறுத்து விட்டதால் பெங்களுருவில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது மூதாட்டி பெரும் சிரமப்பட்டு இரண்டு வாடகை கார்கள் மூலம் தமிழகத்தை வந்தடைந்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டியை சேர்ந்த ஆனந்தம் என்ற மூதாட்டி காலில் உள்ள முறிவால் பெங்களூருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து தமிழகம் வர குறிப்பிட்ட மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுத்து விட்டார்.

பெங்களூருரில் இயங்கும் பிற ஆம்புலன்சுகளும் மறுத்து விட்டதால் வாடகை கார் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

கர்நாடக பதிவு எண் கொண்ட வாடகை கார் எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டதால் தமிழக எல்லையில் இருந்து மற்றோரு வாடகை கார் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழக எல்லை வரை வந்த கர்நாடக வாடகை காரில் வந்த மூதாட்டி பின்னர் தர்மபுரியில் இருந்து வர வைக்கப்பட்ட மற்றோரு வாடகை காரில் ஏறி சொந்த ஊர் சென்றார்.

காலில் அறுவை சிகிச்சை செய்து இருந்ததால் நடக்க முடியாத நிலையில் மூதாட்டியை உறவினர்கள் கார் விட்டு கார் மாற்றியது பார்த்தவர்களை பரிதாபத்தில் ஆழ்த்தியது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>