தமிழகத்தில் 5 இடங்களில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் : முதல்வர் ஜெயலலிதா

2016-20-9-12-35-52kl

சென்னை: தமிழகத்தில் 5 இடங்களில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னை தரமணி, காஞ்சிபுரம், விழுப்புரம், ஆவடி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீமன்ஸ் மற்றும் டிசைன்டெக் லிமிட்டெட் நிறுவனங்களுடன் இணைந்து ரூ.546 கோடி செலவில் இந்த திறன் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் பங்காக ரூ.56 கோடியே 68 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

திறன் வளர்ச்சி மையங்களில் பயிற்சி பெறுபவர்கள் பிற நிறுவனங்களுக்கு பயிற்சி அளிப்பர். இதில் 20,000 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மேலும் செங்கல்பட்டில் ரூ.28 கோடி செலவில் கட்டுடான திறன் பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தொழிலாளர் மருந்தகங்கள்:

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் ரூ.12.70 கோடி செலவில் 11 இடங்கயில் புதிதாக அமைகப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஊத்துக்குளி, துரைசாமிபுரம், மணச்சநல்லூர், கல்பாக்கம், மாமல்லபுரம், அத்திபட்டு, திருமுடிவாக்கம், குளத்தூர், பண்ருட்டி, குலசேகரம், பெருமாநல்லூா் உள்ளிட் இடங்களில் இவை அமைக்கப்பட உள்ளன.

மேலும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் சுமார் ரூ.14 கோடியில் நவீன இயந்திரங்களை நிறுவ முதலமைச்சர் ஆணை வெளியிட்டுள்ளார். மேலும் நெசவாளர்களுக்கான ஆண்டு காப்பீட்டுக் கட்டணத் தொகையில் 50% மானியம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>