தமிழகத்தில் 2,530 தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மூடப்படும்

தமிழகத்தில் 2,530 தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மூடப்படும்
தமிழகத்தில் 2,530 தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மூடப்படும்

சென்னை: தமிழகத்தில் 2,530 தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தட்டச்சு இயந்திரங்களின் தட்டுப்பாட்டால் அரசு உத்தரவின் படி தட்டச்சு தேர்வுகளில் பங்கேற்பதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கணினி மயமாக்கல் காரணமாக தட்டச்சு இயந்திரங்களின் பயன்பாடு குறைந்து அதன் உற்பத்தியும் நின்று போனது. இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பழைய இயந்திரங்களின் உதிரி பாகங்களே தற்போது மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரங்களை பராமரிக்க மெக்கானிக்குகளுக்கும் கடும் தட்டுப்பாடு உள்ளது.
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் தட்டச்சு பயிற்சி பெற்றால் மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தட்டச்சு பயிற்சி பெற்றோருக்கான லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. தட்டச்சு சேவை மையங்களிலும் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. இதனால் தட்டச்சு பயிற்சி பெறுவதில் மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஒரு மாணவர் எந்த தட்டச்சு இயந்திரத்தில் பயிற்சி பெற்றாரோ அதை மட்டுமே தேர்வு மையத்துக்கு எடுத்துச் சென்று தேர்வில் பங்கேற்க வேண்டும் என அரசு விதி உள்ளது. ஆனால் பழைய தட்டச்சு இயந்திரங்கள் பழுதாவதால் மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே கணினியில் தட்டச்சு பயிற்சி பெறவும் தேர்வில் பயன்படுத்தவும் அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>