தமிழகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கபடும்;அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கபடும்;அமைச்சர் காமராஜ்

‘‘குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு 60 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 16 லட்சத்து 20 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 20 ஆயிரத்து 522 குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு தயாராக உள்ளன

சென்னை, : தமிழகத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் நடந்தது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஒவ்வொரு நியாயவிலை கடைக்கும் வழங்கப்படும் இணைய இணைப்புடன் கூடிய விற்பனை இயந்திரத்தில் குடும்ப அட்டை எண், உறுப்பினர்களின் எண்ணிக்கை, செல்போன் எண், அட்டையின் வகை, எரிவாயு விவரம் உள்ளிட்ட தகவல்கள் மென்பொருள் பயன்பாட்டில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த விவரம் குறுஞ்செய்தியாக (எஸ்எம்எஸ்) குடும்ப அட்டைதாரரின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படுகிறது.

தற்போது 13 மாவட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் இந்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆதார் அட்டை வழங்கும் பணி முழுமை பெற்று பதிவுகள் நிறைவு செய்யப்பட்ட பின்னரே, மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க இயலும். எனவே, அனைத்து அங்காடிகளின் பணியாளர்களுக்கும், இதற்கென நியமிக்கப்பட்டுள்ள மென்பொருள் நிறுவனத்தார் மூலம் இப்பணி தொடர்பான பயிற்சியை வழங்க, மாவட்ட வழங்கல் அலுவலர்கள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் பாலச்சந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கூறுகையில், ‘‘குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு 60 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 16 லட்சத்து 20 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 20 ஆயிரத்து 522 குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு தயாராக உள்ளன இன்றுவரை, 4 லட்சத்து 85 ஆயிரத்து 123 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.’

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>