தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இருகட்டமாக நடைபெறுகிறது.

2016-25-9-19-38-31j

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இருகட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பதற்றமான சாவடிகளில் மத்திய அரசு, வங்கி அலுவலர்கள் நுண்பார்வையாளராக நியமிக்கப்படுவார் என மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

நாளை முதல் வேட்பு மனுத்தாக்கல்

தமிழக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதியாகும். அக்டோபர் 4-ம் வேட்புமனு பரிசீலினை செய்யப்படும். மற்றும் அக்டோபர் 6-ம் தேதி வேட்புமனு திரும்பப்பெறலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு அக்டோபர் 19-ம் தேதி தேர்தல்

சென்னை மாநகராட்சிக்கு அக்டோபர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் நடைபெறும் என சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

தேர்தல் விதி அமலுக்கு வந்தது

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் விதி அமலுக்கு வந்துள்ளது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

37 தேர்தல் பார்வையாளர்கள்

தமிழகம் முழுவதும் தேர்தலை கண்காணிக்க 37 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6.5 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

4 விதமான வாக்குச்சீட்டுகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு நான்கு விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். மேலும் வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் வாக்கச்சீட்டுகள் வழங்கப்படும்.

அக்டோபர் 26-ல் பதவியேற்பு

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோர் அக்டோபர் 26-ல் பதவி ஏற்பர் என மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>