தமிழகத்திற்கு நிலையான அரசும், நிரந்தர கவர்னரும் அவசியம் தேவை : தொல்.திருமாவளவன்

தற்போது நிலவும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடுகளை உற்றுநோக்கி வருகிறோம். கவர்னர் பெருபான்மை கொண்ட தரப்பினரை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டப்படி நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தற்போது நிலவும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடுகளை உற்றுநோக்கி வருகிறோம். கவர்னர் பெருபான்மை கொண்ட தரப்பினரை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டப்படி நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழகத்திற்கு நிலையான அரசும், நிரந்தர கவர்னரும் அவசியம் தேவை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது அரசியல் நிலவரம் பரபரப்பாக காணப்படுகிறது. சட்டசபையில் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழகத்தில் தற்சமயம் நிலவும் அரசியல் நெருக்கடி ஜனநாயகத்திற்கு பாதுகாப்பானதாக இல்லை. ஆளுங்கட்சியினர் இரு அணிகளாக பிரிந்து ஒரு அணியினர் அவர்களின் ஆதரவாளர்களை நிலைக்க வைக்கவும், மற்றொரு தரப்பினர் ஆதரவாளர்களை அதிகரிக்க செய்யும் நிலையும் நீடிக்கிறது.

இந்த நிலையில் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் கவர்னர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பரபரப்பான சூழ்நிலை தமிழகத்தில் நிலவி கொண்டிருக்கும் நிலையில் கவர்னர் தமிழகத்திலேயே இல்லை. 5 நாட்களுக்கு பின்னர் அவர் தமிழகம் வந்துள்ளார்.

இதில் ஆளுங்கட்சியை சேர்ந்த இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் என்ன பேசினார்? என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதை கவர்னர் வெளியே சொல்லாமல் இருந்து வருகிறார். இதன் மூலம் இதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தமிழகத்திற்கென்று தனியாக புதிய கவர்னரை நியமனம் செய்திட வேண்டும்.

தற்போது நிலவும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடுகளை உற்றுநோக்கி வருகிறோம். கவர்னர் பெருபான்மை கொண்ட தரப்பினரை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டப்படி நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து உரிய நிவாரணம் பெற்று தரவேண்டும், காவிரி நதி நீர் பிரச்சினை, நீட் தேர்வு விவகாரம் இதுபோன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் நியாயம், உரிமையை வலியுறுத்த நிலையான அரசும், நிரந்தர கவர்னரும் அவசியம் ஆகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் நந்தினி என்ற பெண் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் வயிற்றில் வளர்ந்த சிசுவும் இறந்துள்ளது. இதேபோன்று திட்டக்குடி அருகே புடையூரில் ஒரு சிறுமி கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தலித்களுக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைகள் பல வெளிச்சத்திற்கு வரவில்லை. இவ்வாறு வன்கொடுமை செய்யப்பட்ட தலித் குடும்பங்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தின் கீழ் சம்பவத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>