தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தப்ப முடியாது: பாலி.எஸ்.நாரிமன்

 தமிழகத்துக்கு தண்ணீர் தர தவறினால் நீதிமன்ற அவமதிப்புக்கு  உள்ளாக நேரிடும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மூத்த வக்கீல்  பாலி.எஸ்.நாரிமன்

தமிழகத்துக்கு தண்ணீர் தர தவறினால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மூத்த வக்கீல் பாலி.எஸ்.நாரிமன்

பெங்களூரு: தமிழகத்துக்கு தண்ணீர் தர தவறினால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மூத்த வக்கீல் பாலி.எஸ்.நாரிமன் அறிவுரை வழங்கியுள்ளார். காவிரியிலிருந்து 50 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு திறக்கக் கோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வரும்போது எப்படி சமாளிப்பது என்பது குறித்து டெல்லியில் உள்ள மூத்த வக்கீல் பாலி எஸ். நாரிமனுடன் முதல்வர் சித்தராமையா நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கண்டிப்பாக திறக்க வேண்டும் அதன்படி ஆகஸ்டு மாதம் திறக்க வேண்டிய 50 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமையாக உள்ளது. நீங்கள் தண்ணீர் திறக்காமல் உள்ளதை எதிர்த்து தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதை விசாரணை நடத்தினால் கர்நாடக அரசை தான் நீதிமன்றம் கண்டிக்கும். மேலும் நீதிமன்றம் அவமதிப்பதாகக் கருதும். ஆகவே நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாகாமல் தவிர்க்க வேண்டுமானால் தண்ணீர் திறப்பதுதான் ஒரே வழி என்று முதல்வரிடம் நாரிமன் கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>