தனித்துவத்தையே விரும்புகிறேன்: சூர்யா

ஒவ்வொரு படத்திலும் தனிச்சிறப்பாக ஏதேனும் செய்து ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்திருக்கவே விருப்பம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.

இயக்குநர் விக்ரம் குமார் பேசிய சூர்யா, இயக்குநர் விக்ரம் குமார் படைப்பாற்றல் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். அவரது முந்தைய படங்களையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவ களம் கொண்டதாகவே இருக்கும். நானும், ஒரு நடிகனாக இந்த மாதிரி கதாபாத்திரங்களை மட்டுமே நடிக்க வேண்டும் என எனக்கு எவ்வித கட்டுப்பாடும் வைத்துக் கொண்டதில்லை. நான் கமல் சாரைப் போல் ஒரு நல்ல படைப்பாளி இல்லை. என் படங்களுக்கு நானே கதையை உருவாக்குவது எனக்கு சாத்தியமற்றது. அதேவேளையில் நல்ல கதைக்கரு இருக்கிறது என்பதற்காகவே படங்களை ரீமேக் செய்யவும் நான் விரும்புவதில்லை.

’24′ போன்ற முழுக்க முழுக்க கதைக்களத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்கள் தமிழில் 3 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதாக நான் உணர்கிறேன். ஏனெனில் பெரிய பட்ஜெட் படங்களை ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் வெறும் கதையை மட்டுமே நம்பி முதலீடு செய்ய முன்வருவதில்லை. ஆனால், பாலிவுட் திரையுலகம் அப்படி அல்ல. அந்த வகையில் இந்தி நடிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்கு ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குநர்கள் பெரிய பட்ஜெட்டில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் படங்களை உருவாக்கக்கூடிய சுதந்திரம் இருக்கிறது. இங்கு தமிழிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருகின்றன. ஆனால், அவை எல்லாம் பெரும்பாலும் லோ-பட்ஜெட் படங்களாகவே இருக்கின்றன.

’24′ திரைப்படம் பெரிய பட்ஜெட் படம் என்ற அடையாளத்தை மட்டுமே பெறாமல் ரசிகர்களுக்கு ஒரு பிரத்யேக அனுபவத்தை அளிக்கும் படமாகவும் இருக்க வேண்டும் என விரும்பினோம். ’24′ எங்கள் அனைவரும் மிகவும் நெருக்கமான, முக்கியமான திரைப்படம்.தனித்துவத்தையே விரும்புகிறேன்: சூர்யா

ஒரு நடிகராக இருக்க விருப்பமா நட்சத்திரமாக இருக்க விருப்பமா என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, சில நேரங்களில் நான் சாதாரணமான கதைகளையும் தேர்வு செய்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் என் நலன் விரும்பிகள் திருப்தி அடையவில்லை. எனவே கமர்ஷியல் ரீதியாகவும் ஹிட்டாகக் கூடிய அதே வேளையில் நல்ல கதையும் கொண்ட படங்களில் நடிப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால், அதற்காக எப்போதுமே சிக்கலான கதைகளில் மட்டுமே தேர்வு செய்வேன் என்று அர்த்தமில்லை. சில எளிமையான கதைக்களம் கொண்ட ‘பசங்க-2′, ’36 வயதினிலே’ போன்ற படங்களையும் செய்வேன். நட்சத்திரம் – நடிகர் என்ற பாகுபாடெல்லாம் எனக்குக் கிடையாது. இது வெறும் பொழுதுபோக்கு. ஒரு நடிகராக மட்டுமே கதையைக் கேட்டால் நீங்கள் சுயநலத்தோடு முடிவெடுக்க வேண்டியிருக்கும். அதுபோல் ஒரு நட்சத்திரமாக மட்டுமே கதையை அணுகினால் வேறு எதையும் கவனிக்காமல் நட்சத்திர அந்தஸ்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும்.

‘சிங்கம் 3′ குறித்து பேசிய சூர்யா, ’சிங்கம் 3’ படத்தில் முதல் இரண்டு பாகங்களின் சிறப்பம்சங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தது. முதல் பாகம் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. இரண்டாவது பாகத்தில் ஆக்‌ஷன் அதிகமாக இருந்தது. ’சிங்கம் 3’ல் இரண்டுமே கலந்திருக்கும் என்று கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>