தனது புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என ஜெ., கூறினார்: அப்பல்லோ

jayalai

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நவம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனிடையே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் ஒய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு தொடுத்தார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கேட்டு ஜோசப் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரமேஷ் மற்றும் மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐகோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை தங்கள் தரப்பு அறிக்கையை தாக்கல் செய்தது.

அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த பதில் மனுவில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம்சிஏ விதிகளின்படி நோயாளி விவரங்களை வெளியிடவில்லை என அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 2 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கை மார்ச் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலவேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>