தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு கண்டனம்: காவிரி பாசன மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு கண்டனம்: காவிரி பாசன மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு கண்டனம்: காவிரி பாசன மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது

திருச்சி: காவிரியில் தண்ணீர் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி கொய்த்துபோன நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் ஒரு போக சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகிவிட்டது. காவிரிநடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதே இதற்கு காரணம்.

எனவே கர்நாடக அரசை கண்டிக்கும் வகையிலும், தமிழக அரசை வலியுறுத்தியும் காவிரி பாசன பகுதிகளான திருச்சி, தஞ்சை. திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 1,000 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் விவசாய சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இடதுசாரி கட்சிகளின் விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பும், மறியலும் நடைபெற்று வருகிறது.

திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இனிமேலும் மவுனம் காக்காமல் நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யாததால் காவிரியில் இருந்து பாசன நீர் திறந்துவிட முடியாத நிலையில் இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>