தண்ணீரும்… கண்ணீரும்…. சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கபடாததால் விவசாயிகள் கவலை

தண்ணீரும்... கண்ணீரும்.... சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கபடாததால் விவசாயிகள் கவலை

தண்ணீரும்… கண்ணீரும்…. சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கபடாததால் விவசாயிகள் கவலை

தஞ்சை: சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கபடாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மேட்டூர் அணை வழக்கமான தேதிகளில் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டுகளில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருந்ததால் ஜுன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.

தற்போது வரை தண்ணீர் திறக்கப்படாததால் ஒருபோக சம்பா நெல் சாகுபடியும் நடக்குமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நடப்பாண்டில் குறுவை மட்டுமின்றி ஆடிப்பட்டத்தில் சம்பா சாகுபடிக்கு நாற்று உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை வேளாண் தொழிலையே மறந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும் என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் தற்போது 24 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. சம்பா சாகுபடிக்கு 175 நாட்களுக்கு தண்ணீர் தேவைபடும் நிலையில் அணையில் இப்போது உள்ள நீர் சாகுபடி முழுமைக்கும் போதுமானதாக இல்லை. எனவே கர்நாடகத்திடம் இருந்து உரிய காவிரி நீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும் என்பைத தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும். வேலை இழந்துள்ள விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>