தண்ணீரின்றி எலுமிச்சை மரங்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் இறந்தார்.

images
புளியங்குடி: வாசுதேவநல்லூர் அருகே தண்ணீரின்றி எலுமிச்சை மரங்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் இறந்தார். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தேசியம்பட்டியைச்சேர்ந்த விவசாயி சம்மனசு(56). இவர் தனது 4 ஏக்கர் நிலத்தில் 230 எலுமிச்சை மரங்கள் வளர்த்து வந்தார். மரங்களில் காய் பிடித்து வந்தநிலையில் போதிய தண்ணீர் கிடைக்காததால், 70 எலுமிச்சை மரங்கள் கருகின. நேற்று நிலத்திற்கு சென்ற அவர், மேலும் கருகிய எலுமிச்சை மரங்களை பார்த்து அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.

நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், அவரை வாசுதேவநல்லூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், சம்மனசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்மனசுக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவருடன் சேர்த்து வறட்சியால் இறந்த விவசாயிகள் எண்ணிக்கை 289 ஆனது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>