தஞ்சை உள்பட 6 மாவட்டங்களில் 19ம் தேதி கடையடைப்பு, மறியல்: விவசாய சங்கங்கள் முடிவு

தஞ்சை: தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தை கூட்டி காவிரியில் தமிழகத்திற்கு உரிய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 19ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் முழு கடையடைப்பு, 500 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது

தஞ்சை: தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தை கூட்டி காவிரியில் தமிழகத்திற்கு உரிய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 19ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் முழு கடையடைப்பு, 500 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது

தஞ்சை: தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தை கூட்டி காவிரியில் தமிழகத்திற்கு உரிய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 19ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் முழு கடையடைப்பு, 500 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த இடதுசாரி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணன் தலைமையில் தஞ்சையில் நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி என்பதே இல்லாமல் போய்விட்டது. இதனால் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு குறுவை இல்லை என்றாகிவிட்டது. விவசாயிகள் சம்பாவை நம்பி கொண்டிருந்த நிலையில், தற்போது அதுவும் இல்லை என்ற அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுக்கு விவசாயிகள் பற்றி குறைந்தபட்ச கவலை கூட ஏற்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது. தமிழகத்தின் உயிர்நாடியான இப்பிரச்னையில் தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படுகிறதே தவிர அனைத்துக் கட்சி கூட்டம், அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளோடு கலந்து பேசி மத்திய அரசுக்கு கடுமையான நிர்பந்தம் கொடுக்கவோ, கர்நாடக முதல்வரை சந்தித்து வலியுறுத்தவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தமிழக அரசின் இந்த தன்னிச்சையான போக்கு தமிழகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அனைத்து கட்சிகள் கூட்டம், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தை உடனடியாக தமிழக அரசு கூட்டி காவிரியில் தமிழகத்திற்கு உரிய உரிமையை நிலைநாட்ட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவை உடனே அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் முழு கடையடைப்பு, 500 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>