தங்கப்பதக்கத்தை வெல்வாரா?:சிந்து

பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து பதக்கத்தை உறுதி செய்தார். இன்று இரவு 7.30க்கு உலகின் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின் மரினை பைனலில் சந்திக்கிறார்.

பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து பதக்கத்தை உறுதி செய்தார். இன்று இரவு 7.30க்கு உலகின் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின் மரினை பைனலில் சந்திக்கிறார்.

பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து பதக்கத்தை உறுதி செய்தார். இன்று இரவு 7.30க்கு உலகின் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின் மரினை பைனலில் சந்திக்கிறார். இதில், சிந்து வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒலிம்பிக் பேட்மிண்டனில் வரலாற்று சாதனை படைத்துள்ள பி.வி.சிந்துக்கு வாழ்த்து மழை குவிந்து வருகின்றன. ரியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பெறாதா என்ற ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக். இவர் வெண்கலம் வென்ற அதே சூட்டோடு, நாட்டுக்கு அடுத்த பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பி.வி.சிந்து. பேட்மிண்டன் அரையிறுதியில் சிந்து பெற்ற வெற்றியே, அவரது சொந்த ஊரான ஹைதராபாத் உட்பட நாடெங்கும் ரசிகர்கள் ஆராவாரத்துடன் கொண்டாடினர். அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மகிழ்ச்சியில் திழைத்தனர். சிந்துவின் வெற்றியை இந்தியர்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சாதனை நாயகி சிந்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் வருகிறது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இறுதி போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சிந்துவால் நாடு பெருமை கொள்வதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பாராட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சிந்துவை பாராட்டியுள்ளார். செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், துப்பாக்கி சுடுதல் வீரர், பாலிவுட் நடிகர் அபிதாப் பச்சன் உள்ளிட்டோர் சிந்துக்கு வாழ்த்து கூறியுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் சிந்துவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>