டெல்லி மாடல் அழகி, நேபாள சிறுமியை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்: மும்பை நீதிமன்றம் உத்தரவு

நேபாளத்தை சேர்ந்த 16 வயது சிறுமி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பலரால் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார்

நேபாளத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பலரால் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார்

மும்பை : 100க்கும் மேற்பட்டோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மாயமான, டெல்லி மாடல் அழகி மற்றும் நேபாள சிறுமி ஆகியோரை தேடி கண்டுபிடிக்க புனே போலீசாருக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட காயங்களுடன் இளம்பெண் ஒருவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் அந்த பெண் கூறியதாவது:
சமூக வலைதளம் மூலம் எனக்கு அறிமுகமான ரோஹித் பண்டாரி என்பவரை நம்பி விளம்பர பட வாய்ப்புக்களை பெறுவதற்காக அவருடன் புனே சென்றேன். ஆனால், அந்த நபர் புனேயில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், பலரை அழைத்து வந்து பலாத்காரம் செய்ய வைத்தார்.

அந்த வீட்டில் பியூட்டி பார்லரில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வரப்பட்ட நேபாளத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பலரால் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இருவரும் சமயம் கிடைத்த நேரத்தில், அங்கிருந்து தப்பி டெல்லி வந்தாம். இங்குதான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். இவ்வாறு அந்த மாடல் பெண் கூறினார்.

இது தொடர்பாக 2016ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி டெல்லி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கறிஞர் கபூர் என்பவர் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் காவல் நிலையத்தில் புகார் செய்ய உதவியுள்ளார். பின்னர் இந்த வழக்கு புனேயில் உள்ள விமன்தால் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்களாக பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் தொடர்பு கொள்ள இயலவில்லை எனக்கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் கபூர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சித் மோர் மற்றும் ரேவதி டேரே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘காணாமல் போன டெல்லி மாடல் பெண் மற்றும் நேபாள சிறுமியை புனே போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 31ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>