டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்டா விவசாயிகள் தொடர் போராட்டம் அறிவிப்பு

ஜக்கம்மா செய்தி

தஞ்சை: டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உள்ள விவசாயிகள் இன்று தங்கள் போராட்டத்தை தொடங்கினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் கடந்த 15 நாள்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் காவிரி உரிமை மீட்புக்குழுவினரும், தஞ்சை விவசாயிகளும் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை ஆட்சியர் அலுவலகம் செல்லும் நுழைவாயிலில் காவல் துறை தடுத்து நிறுத்தியது. இதனால் பிரதான சாலை ஓரத்தில் அமர்ந்து உடலில் இலைகளை கட்டிக் கொண்டு பட்டை போட்டுக் கொண்டு விவசாயிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

விவசாயிகளுக்காண வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கியுள்ளனர். கவல் அறிந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளும் இவர்களுக்கு வலுசேர்க்க வருகை தந்த வண்ணம் உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த இடத்தை விட்டு செல்வதில்லை என்று போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>