டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு போலீஸ் ஆய்வில் தகவல்

 டெல்லியில் நாள்தோறும் 4 பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், 9 பெண்கள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

டெல்லியில் நாள்தோறும் 4 பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், 9 பெண்கள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக டெல்லி போலீசார் மேற்கொண்ட விரிவான ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.கடந்த 2012 முதல் 2015 வரை எடுத்த ஆய்வின் படி டெல்லியில் நாள்தோறும் 4 பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், 9 பெண்கள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

2001–ம் ஆண்டு 381 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2015–ம் ஆண்டில் அது 2,199 வழக்குகளாக பதிவாகி உள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் கற்பழிப்பு வழக்குகள் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வரதட்சணை கொடுமைக்கு கடந்த 4 ஆண்டுகளில் 681 பெண்கள் பலியாகி உள்ளனர். மேலும் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் உறவினர்கள் கொடுமைப்படுத்தியதாக கடந்த 4 ஆண்டுகளில் 13,984 வழக்குகள் பதிவாகி உள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>