டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி கெஜ்ரிவால் அரசு தாக்கல் செய்த வழக்கு – விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி கெஜ்ரிவால் அரசு தாக்கல் செய்த வழக்கு - விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி கெஜ்ரிவால் அரசு தாக்கல் செய்த வழக்கு – விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனிடையே யூனியன் பிரதேசமாக உள்ள டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி ஆம்ஆத்மி அரசு சிறப்பு அனுமதி மனுவை உச்சநீதிமன்ற்ததில் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, என்.வி.ரமணா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாணைக்கு வந்தது.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரும் மனுவை தற்போதைக்கு விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என்று நீதிபதிகள் கூறினர். முதலில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறும் அவர்கள் டெல்லி அரசுக்கு அறிவுறுத்தினர். மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்த டெல்லி அரசு தரப்பு வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங், இந்த மனுவை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பதிவு செய்வது தங்கள் வேலையல்ல என்று நீதிபதிகள் தெரிவித்து விட்டனர். ஒரு வார காலத்திற்குள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக குறிப்பிட்ட வழக்கறிஞர், அதனுடன் சேர்த்து மாநில அந்தஸ்து கோரும் மனுவையும் விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதுபற்றி தலைமை நீதிபதி தான் முடிவெடுக்க முடியும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>