டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 46 பேர் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

dengue

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தமிழகத்தில் தற்போது தீவிரமாக பரவி டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். கொசுவால் பரவும் இந்த நோயைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளும் அமைக்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தொடர் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பரில் 2 ஆயிரத்து 687 பேரும், அக்டோபரில் 6 ஆயிரத்து 124 பேரும், நவம்பரில் 4 ஆயிரத்து 834 பேரும், டிசம்பரில் ஆயிரத்து 944 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>