டெங்குவுக்கு நாடு முழுவதும் 1.51 லட்சம் பேர் பாதிப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு, உயிரிழப்பு இரண்டிலும், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு, உயிரிழப்பு இரண்டிலும், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை:
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில், 1.51 லட்சமாக உயர்ந்துள்ளது. பாதிப்பு, உயிரிழப்புகளிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
நாட்டில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில் மத்திய அரசு, மாதம் ஒருமுறை பதிவிட்டு வருகிறது. தற்போது, டெங்கு காய்ச்சல் அதிகரித்ததால், அதன் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் குறித்து, அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகிறது.
தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், நவம்பரில், 19 ஆயிரமாக இருந்த டெங்கு பாதிப்பு, தற்போது, 21 ஆயிரத்து, 613 ஆக உயர்ந்துள்ளது; 52 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள, கேரளாவில், 19 ஆயிரத்து, 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 36 பேர் உயிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள, கர்நாடகாவில், 16 ஆயிரத்து, 458 பேர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிராவில், 34 பேர், உத்தர பிரதேசத்தில், 28 பேர், மேற்கு வங்கத்தில், 19 பேர் மற்றும் புதுச்சேரியில், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டில், நாடு முழுவதும், 1.51 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 225 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2012ல், 13 ஆயிரமாக இருந்த பாதிப்பு,
தற்போது, 21 ஆயிரத்து, 613 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில், 2016ல், அதிகபட்சமாக, 1.29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர் தற்போது, எப்போதும் இல்லாத வகையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.51 லட்சமாக உயர்ந்துள்ளது. பாதிப்பு, உயிரிழப்பு இரண்டிலும், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>