டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சி.பி.ஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சென்னை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. திருச்செங்கோட்டில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா 2015 செப்டம்பர் தற்கொலை செய்து கொண்டார். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடிந்துள்ளதாக தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிந்தநிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. மிகவும் அபூர்வமான வழக்கைத்தான் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாத உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் விஷ்ணுபிரியா (27). திருமணமாகாதவர். இவரது தந்தை ரவி கடலூரைச் சேர்ந்த விஷ்ணுபிரியா பி.எஸ்சி. கணிதத்தில் பட்டம் பெற்றவர். சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறையில் பணிபுரிந்துவந்த இவர், கடந்த 2014-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று, சிவகங்கையில் பயிற்சி முடித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில். திருச்செங்கோடு டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி மாலை தூக்கில் தொங்கிய நிலையில் விஷ்ணுபிரியா இறந்து கிடந்தார். சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் அளித்த நெருக்கடி காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமார் அளித்த நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டினர். மேலும், உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி.யாக இருந்த மகேஸ்வரி, வழக்குரைஞர் மாளவியா ஆகியோர் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கோடு, பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவர் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி, இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். முதலில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பிறகு, ரவி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>