டிசம்பருக்குள் டீசல், பெட்ரோல் 10 ரூபாய்க்கு கிடைக்கும் : ராமர் பிள்ளை

டிசம்பருக்குள் டீசல், பெட்ரோல் 10 ரூபாய்க்கு கிடைக்கும் : ராமர் பிள்ளை

டிசம்பருக்குள் டீசல், பெட்ரோல் 10 ரூபாய்க்கு கிடைக்கும் : ராமர் பிள்ளை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார்.

1996-ம் ஆண்டு பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகை எரிபொருளை தாம் தயாரித்துள்ளதாக அறிவித்தவர் ராமர் பிள்ளை. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் ராமர்பிள்ளை குறித்த செய்திகள் வெளியாவதும் மறைவதும் தொடர் கதையாகி வருகிறது.

தற்போது சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர்பிள்ளை, ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் ராணுவ பயன்பாட்டுக்காக தம்முடைய மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் இதற்காக மும்பையில் உள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மீண்டும் மூலிகை பெட்ரோல் வருவதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். நான் படிக்காததாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே மூலிகை பெட்ரோல் விவகாரம் பிரச்சனை ஆக்கப்பட்டது.

என்னுடைய மூலிகைப் பெட்ரோல் விரைவில் சந்தைக்கு வரும். என்னுடைய மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளனர் என்றார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>