டிசம்பரில் P.S.L.V மார்க்-3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்

m_id_455075_gslv

மதுரை: P.S.L.V மார்க்-3 செயற்கைக்கோள் வரும் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.சிவன் கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். செயற்கைகோள் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபாராமாக உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் வரும் 5 ஆண்டுகளில் இஸ்ரோ சார்பில் 30-க்கம் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என்றார். ராக்கெட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள் என அனைத்தும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்தே கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்தார். ஆனால தமிழகத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் பங்களிப்பு இதில் குறைவாகவே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>