டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை ஊதிய உயர்வு: அமைச்சர் பி.தங்கமணி அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை ஊதிய உயர்வு: அமைச்சர் பி.தங்கமணி அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை ஊதிய உயர்வு: அமைச்சர் பி.தங்கமணி அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசும்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) 26 ஆயிரத்து 634 சில்லறை விற்பனை பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தொகுப்பு ஊதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2011 முதல் 2015 வரை 5 ஆண்டுகளிலும் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டன.

அதன்படி இந்த ஆண்டும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 500, விற்பனையாளர்களுக்கு ரூ. 400, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ. 300 என ஊதியம் உயர்த்தி வழங்கப்படும. இந்த ஊதிய உயர்வு வரும் செப்டம்பர் முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் 7 ஆயிரத்து 204 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து 677 விற்பனையாளர்கள், 3 ஆயிரத்து 753 உதவி விற்பனையாளர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக ஆண்டுக்கு ரூ. 13 கோடியே 20 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு உண்டாக்க மாவட்டங்கள்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம், முகாம்கள் நடத்த ரூ. 3 கோடி ஒதுக்கப்படும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களை கள்ளத்தனமாக கடத்துதல், விற்பனை செய்தல், ஆயத்தீர்வை செலுத்தப்படாத இந்திய தயாரிப்பு மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காகவும், அவர்கள் வேறு தொழில்களை செய்யவும் இந்த நிதியாண்டில் ரூ. 5 கோடி மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி அறிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>