ஞானதேசிகன் சஸ்பெண்ட் பற்றி CM விளக்கம் அளிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது:தி.மு.க.தலைவர்மு.கருணாநிதி

Karu_21

ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்., திடீரென்று “சஸ்பெண்ட்” செய்யப்பட்டிருக்கிறாரே?

“மக்கள் செய்தி மையம்”” சார்பில், “தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல்” – “சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்” என்ற தலைப்பில், அவர்களின் திருவுருவப் படங் களையும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத் தையும் முதல் பக்கத்தில் பெரிதாகப் பிரசுரித்து வெளியிட்டிருந்தார்கள்.
அந்த ஊழலில் சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் முதல் இடத்தில் இருந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்., அவர்களையும், நான்காவது இடத்தில் இருந்த அதுல் ஆனந்த், ஐ.ஏ.எஸ்., அவர்களையும்தான் தற்போது திடீரென்று ஜெயலலிதாவே இடை நீக்கம் செய் திருக்கிறார்.
அந்த 12 அதிகாரிகளில் இரண்டாவதாக இடம் பெற்றிருப்பவர்தான் தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் ராம்மோகன் ராவ் ஐ.ஏ.எஸ். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரங்களையெல்லாம் இவர்தான் கவனித்து வந்தார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தலைமைச் செயலாளர் பொறுப்பில், அ.தி.மு.க. ஆட்சியில் கொடி கட்டிப் பறந்த ஞானதேசிகன் தற்போது திடீரென்று “சஸ்பெண்ட்” ஆக என்ன காரணம் என்று அரசுத் தரப்பில் நேரடியாக இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஏடு களில் இவர் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன.

குறிப்பாக “தினமலர்” இதழ், இவர் ஏன் சஸ்பெண்ட் செய்யப் பட்டார் என்று எழுதியுள்ளது. அது வருமாறு :-

"ஞானதேசிகன் மின்வாரியத் தலைவராகஇருந்த போதுதான், 11 தனியார் நிறுவனங்களிட மிருந்து 3,330 மெகாவாட் மின்சாரத்தை, ஒரு யூனிட் 4.91 ரூபாய்க்கு வாங்க, 2013 அக்டோபர் மாதம் மின்வாரியம் ஒப்பந்தம் செய்தது.

“ஞானதேசிகன் மின்வாரியத் தலைவராகஇருந்த போதுதான், 11 தனியார் நிறுவனங்களிட மிருந்து 3,330 மெகாவாட் மின்சாரத்தை, ஒரு யூனிட் 4.91 ரூபாய்க்கு வாங்க, 2013 அக்டோபர் மாதம் மின்வாரியம் ஒப்பந்தம் செய்தது.

“ஞானதேசிகன் மின்வாரியத் தலைவராகஇருந்த போதுதான், 11 தனியார் நிறுவனங்களிட மிருந்து 3,330 மெகாவாட் மின்சாரத்தை, ஒரு யூனிட் 4.91 ரூபாய்க்கு வாங்க, 2013 அக்டோபர் மாதம் மின்வாரியம் ஒப்பந்தம் செய்தது. இதற்கு உடனடியாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லை. அந்த விலைக்கு மின்சாரம் வாங்கினால், மின் வாரியத்திற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர். கடந்த 2014 லோக் சபா தேர்தலின் போது மின்வாரியம், கேரளாவில் உள்ள என்.டி.பி.சி. எனப்படும், தேசிய அனல் மின் கழகத்திட மிருந்து, மின்சாரம் வாங்கியது.

அதனுடன் நேரடி யாக ஒப்பந்தம் செய்யாமல், கேரள மாநில மின் வாரியத்திடம் ஒப்பந்தம் செய்ததால், ஒரு யூனிட் 10 ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சாரத்திற்கு மின்வாரியம் 16 ரூபாய் கொடுத்தது. இதனால் மின் வாரியத்திற்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட் டுள்ளதாகப் புகார் எழுந்தது.

மேலும் ஜி.எம்.ஆர்., மதுரை பவர், சாமல்பட்டி, பிள்ளை பெருமாள் நல்லூர் ஆகிய நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2012 முதல் 2014 டிசம்பர் வரை ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய்க்கு மேல் வாங்கியதால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

சர்வதேசச் சந்தையில், ஒரு டன் நிலக்கரி விலை 3,600 ரூபாய் என்ற அளவில் இருந்த போது 2014 டிசம்பர் வரை மின் வாரியம் 5,400 ரூபாய்க்கு வாங்கியதால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இவை அனைத்தும் அரசியல் குறுக்கீடுகளால் செய்யப்பட்டவை. எனவே தற்போது ஞானதேசிகனை சஸ்பெண்ட் செய்துள்ள அரசு, சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று “தினமலர்” எழுதியுள்ளது. கடுமையான இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா அரசு அளிக்கின்ற பதில் என்ன?

“தி டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு இந்த அதிகாரிகளின் “சஸ்பென்ஷன்” பற்றி எழுதும்போது,”அரசு மேற்கொண்ட நடவடிக் கைக்கு என்ன காரணம் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒருசாரார் கூறும்போது, இந்த இரண்டு அதிகாரிகளும் சில முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சரவையை இருட்டிலே வைத்திருந்தனர் என்கிறார்கள்.

மத்திய அரசு தமிழ்நாட்டில் கனிம வளம் குறித்து அனுப்பிய அறிக்கை முதல் அமைச்சரைக் கோபப்படுத்தி விட்டதாக ஒரு தகவல் கூறுகிறதாம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சங்கத்தினர் கூறும்போது, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள "சஸ்பென்ஷன்" நடவடிக்கை அதிகார வர்க்கத்தின் மீது நடத்தப் பட்ட ஒரு தாக்குதல் என்றும், பல முக்கியமான அரசுப் பதவிகள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதால் ஏற்கனவே அதிகார வர்க்கம் நிலை குலைந்துள்ளது என்றும், சில அதிகாரிகளின் பொறுப்பில் பல துறைகள் இருந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சங்கத்தினர் கூறும்போது, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள “சஸ்பென்ஷன்” நடவடிக்கை அதிகார வர்க்கத்தின் மீது நடத்தப் பட்ட ஒரு தாக்குதல் என்றும், பல முக்கியமான அரசுப் பதவிகள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதால் ஏற்கனவே அதிகார வர்க்கம் நிலை குலைந்துள்ளது என்றும், சில அதிகாரிகளின் பொறுப்பில் பல துறைகள் இருந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சங்கத்தினர் கூறும்போது, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள “சஸ்பென்ஷன்” நடவடிக்கை அதிகார வர்க்கத்தின் மீது நடத்தப் பட்ட ஒரு தாக்குதல் என்றும், பல முக்கியமான அரசுப் பதவிகள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதால் ஏற்கனவே அதிகார வர்க்கம் நிலை குலைந்துள்ளது என்றும், சில அதிகாரிகளின் பொறுப்பில் பல துறைகள் இருந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

18 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பல மாதங்களாக காத்திருப்போர் பட்டியலில் நியமனங்களை எதிர்பார்த்துக் காத்தி ருக்கிறார்களாம்.

முக்கியத் துறைகளான கால்நடை வளம், பால் வளம், மீனளம், வணிக வரித் துறை, தொழில் துறை, எரிசக்தித் துறை, சட்டத் துறை, போக்குவரத்துத் துறை போன்றவற்றிற்கு முழு நேரச் செயலாளர்களே இல்லை என்றெல்லாம் “டைம்ஸ் ஆப் இந்தியா”எழுதியுள்ளது.

முக்கியப் பதவி இடங்கள் பலவற்றைப் பல மாதங்களாக நிரப்பாமல் வைத்திருப்பதும், அதிகாரிகள் சிலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை ஒப்படைப்பதும், பல அதிகாரிகளை மாதக் கணக்கில் கட்டாயக் காத்திருப்பில் வைத்திருப்பதும் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி, நிர்வாகத்தில் தேக்க நிலையை ஏற்படுத்தாதா? இந்த நிலையில் இரண்டு மூத்த அதிகாரிகளை அ.தி.மு.க. அரசு என்ன காரணத்திற்காக தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது? அவர்கள் செய்த தவறு என்ன? அவர்கள் செய்த தவறுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார்? அவர்கள் தவறு செய்திட ஊக்குவித்துத் தூண்டியவர்கள் யார் யார்? அவர்கள் மீது அல்லது முதன்மைக் குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை என்பன போன்ற விவரங்களையெல்லாம் வெளிப்படையாக அறிவித்து விட்டால், ஊடகங்களும், அரசியல் தளத்திலும் ஒவ்வொருவரும் தன்னிச்சையாகக் கருத்துகளைக் கூறவேண்டிய நிலை ஏற்படாது என்பதால், எது எதற்கோ அறிக்கை படித்து, சட்டப் பேரவை நிகழ்வுகளில் சுறுசுறுப்பாக பங்கெடுத்துக் கொள்வதைப் போன்ற மாயையை ஏற்படுத்திட முயற்சிக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதா இது பற்றியும் விளக்கம் அளிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் ஏன் அரசு நிர்வாகத்திற்கும் நல்லது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>